யாழ். மானிப்பாய் காவல்துறை பிரிவிற்குட்பட்ட சங்கானை பகுதியில், 13 வயதுச் சிறுமியை தவறான நடத்தைக்கு உட்படுத்திய சந்தேகநபர் ஒருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து மேலும் தெரிய வருகையில்,
“குறித்த நபர் பாதிக்கப்பட்ட சிறுமியை வேலைக்காக அழைத்துச் செல்வதை வழக்கமாக கொண்டுள்ளார்.
இந்நிலையில் நீண்டகாலமாக அந்த சிறுமியை தவறான செயற்பாட்டிற்கு உட்படுத்தி வந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில் காவல்துறை அவசர தொலைபேசி இலக்கத்திற்கு இது குறித்து முறைப்பாடு வழங்கப்பட்டுள்ளது.
இதன்படி மானிப்பாய் காவல்துறை இது குறித்து விசாரணைகளை மேற்கொண்ட நிலையில் குறித்த சந்தேகநபரை கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபரை நேற்றையதினம் மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்தியவேளை அவரை 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.


Recent Comments