மன்னார் முள்ளிக்குளத்தில் தலா 50 மெகாவாட் திறன் கொண்ட இரு புதிய காற்றாலை மின் நிலையங்களை அமைக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இதுதன் மூலம் 2030க்குள் நாட்டின் மின்சார உற்பத்தியின் 70% புதுப்பிக்கத்தக்க ஆற்றலிலிருந்து பெறும் அரசின் நோக்கத்தை முன்னெடுத்துச் செல்லும் முயற்சியாகும்.
இதற்கு முன், 10 பெப்ரவரி 2025 அன்று 100MW முள்ளிக்குளம் காற்றாலை மின் திட்டத்திற்கான தனியார் துறையின் முன்மொழிவுகளை கோர அரசு முடிவு செய்தது.
இந்த திட்டம் Build–Own–Operate (BOO) முறைமையில், 20 ஆண்டு கண்காணிப்பு காலத்துடன் நடைமுறைப் படுத்தப்படவுள்ளது.
முன்மொழிவுகளை மதிப்பீடு செய்ததையும், அமைச்சரவை நியமித்த பேச்சுவார்த்தைக் குழுவின் பரிந்துரைகளையும் தொடர்ந்து, ஒப்பந்தங்களை வழங்குவதற்கான மின்சார அமைச்சரின் பரிந்துரையை அமைச்சரவை அங்கீகரித்துள்ளது.
இந்த இரண்டு 50MW காற்றாலை மின்நிலையங்களை பின்வரும் நிறுவனங்கள் உருவாக்க உள்ளன.
விடுல்லங்கா PLC மற்றும் டேவிட் பீரிஸ் மோட்டார் கம்பெனி (லங்கா) லிமிடெட் இணைகுழு விண்ட்போர்ஸ் PLC


Recent Comments