Friday, January 23, 2026
HuisBreakingமூன்று மாதங்களுக்குள் 184 கோடி ரூபாவை செலுத்துமாறு கப்ராலுக்கு நிபந்தனை..!

மூன்று மாதங்களுக்குள் 184 கோடி ரூபாவை செலுத்துமாறு கப்ராலுக்கு நிபந்தனை..!

சர்ச்சைக்குரிய கிரேக்க பத்திர முதலீட்டு இழப்பு 1,843,267,595.65 ரூபாய் தொடர்பில், மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் மீது தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகை, நிபந்தனையின் அடிப்படையில் திரும்பப் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு இந்த வழக்கை திரும்பப்பெற்றது.

கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி முகமது மிஹைல் முன் நடந்த வழக்கு விசாரணையின் போது இந்த முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த குற்றச்சாட்டை திரும்பப்பெறுவதற்கான நிபந்தனைகளின் கீழ், குற்றம் சாட்டப்பட்ட கப்ரால் நேற்று முதல் மூன்று மாதங்களுக்குள் இலங்கை மத்திய வங்கிக்கு இழப்பீட்டை திருப்பிச் செலுத்த வேண்டும்.

இணங்கத் தவறினால் புதிய குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்படும் என்று இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணையகம் தெரிவித்துள்ளது.

கிரேக்கத்தின் பொருளாதார நெருக்கடியின் போது, குற்றம் சாட்டப்பட்டவர் தெரிந்தே கிரேக்க அரசாங்கத்தால் வழங்கப்பட்ட கிரேக்க திறைசேரிப் பத்திரங்களை வாங்குவதன் மூலம் அரசாங்கத்திற்கு அரசுக்கு 1.84 பில்லியனுக்கும் அதிகமான இழப்பை ஏற்படுத்தியதாக கூறியே வழக்கு தொடரப்பட்டது.

வழக்கின் ஏனைய பிரதிவாதிகளில் மத்திய வங்கியின் முன்னாள் துணை ஆளுநர் தர்மசேன தீரசிங்க மற்றும் உதவி ஆளுநர்கள் டான் வசந்த ஆனந்த சில்வா மற்றும் எம்.ஏ.கருணாரத்ன ஆகியோர் அடங்குவர்.

இந்த நிலையில் குறித்த பேரையும் கொழும்பு மேல் நீதிமன்றம் நிபந்தனையின்றி விடுவித்துள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments

error: Content is protected !!