‘மெய்யழகன்’ படத்தினை தொடர்ந்து கார்த்தி நடிப்பில் ‘வா வாத்தியார்’ ரிலீசாக இருக்கிறது. நாளை வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்ட இந்த படத்தை திரையில் காண்பதற்கு ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருப்பில் உள்ளனர்.
இந்நிலையில் ‘வா வாத்தியார்’ ரிலீஸ் குறித்து வெளியாகியுள்ள புதிய அறிவிப்பு ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
ஆனால் இப்படத்துக்கு எதிராக வழக்கு தொடரப்பட்ட காரணத்தால் திட்டமிட்டப்படி வெளியாகுமா, இல்லையா? என்ற சந்தேகம் எழுந்தது.

இந்நிலையில் அறிவிக்கப்பட்டதை போன்று நாளை ‘வா வாத்தியார்’ ரிலீசாக வாய்ப்பில்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால் ரசிகர்கள் கடுமையாக அப்செட் அடைந்துள்ளனர்.
‘வா வாத்தியார்’ தயாரிப்பாளர் ஸ்டூடியோ கிரீன் ஞானவேல் ராஜா வாங்கிய கடனை திருப்பி அளிக்கும் வரை இந்த படத்தினை வெளியிட சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது.
ஆனாலும் திட்டமிட்டப்படி படத்தை ரிலீஸ் செய்வதற்கான பணிகளில் படக்குழு கவனம் செலுத்தியது. இதனிடையில் நேற்றைய தினம் இப்படத்தின் வழக்கு விசாரணை நடந்த நிலையில் ஞானவேல் ராஜா தரப்பில் தற்போது 3 கோடியே 75 லட்சம் ரூபாயை 24 மணி நேரத்தில் செலுத்துவதாகவும், மீதமுள்ள தொகைக்காக சொத்து ஆவணங்களை தாக்கல் செய்வதாகவும் தெரிவிக்கப்பட்டது.

ஆனால் இதனை ஏற்க மறுத்த நீதிமன்றம் கடன் தொகையை திருப்பி செலுத்தும் வரை ‘வா வாத்தியார்’ படத்தை வெளியிடக் கூடாது என தடை விதித்துள்ளது. இதனால் நாளை படம் வெளியாகுமா என்ற சந்தேகம் எழுந்தது.
இந்நிலையில் ‘வா வாத்தியார்’ தொடர்பாக படக்குழு புதிய ப்ரோமோ வீடியோ ஒன்றினை பகிர்ந்துள்ளது. தயாரிப்பு தரப்பில் இருந்து வெளியிடப்பட்டுள்ள இந்த அதிகாரப் பூர்வ அறிவிப்பில் ‘வா வாத்தியார்’ விரைவில் வெளியாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது.


Recent Comments