அவசரகால சட்டம் தவறான நோக்கில் பயன்படுத்தப்படவில்லை என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.
“அனர்த்த நிலைமையை எதிர்கொள்ளவே அது அமுல்படுத்தப்பட்டது. மாறாக அரசியல் நோக்கங்களுக்காக சட்டம் பயன்படுத்தப்படவில்லை” எனவும் அவர் கூறினார்.
எனினும், அவசரகால சட்டம் ஒடுக்குமுறை ஆயுதமாக பயன்படுத்தப்படுகின்றது என எதிரணி குற்றஞ்சாட்டி வருகின்றது.
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரையின் போது இக்குற்றச்சாட்டை நிராகரித்திருந்தார்.
அதேவேளை, “அவசரகாலச் சட்டத்தின் கீழ் தங்கள் அடிப்படை உரிமைகள் மீறப்படுவதாக எவரேனும் கருதினால் அது தொடர்பில் முறைப்பாடு செய்யலாம்.” எனத் தெரிவித்தார்.


Recent Comments