எதிர்வரும் 16 ஆம் திகதி முதல் 19 ஆம் திகதி வரை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணம் உட்பட்ட நாட்டின் பல பகுதிகளுக்கும் மிதமானது முதல் கனமான மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.
ஒரு சில இடங்களில் மிகக் கனமழை கிடைக்கும் வாய்ப்புள்ளது என யாழ் பல்கலைக் கழக புவியியல் துறை தலைவர் பேராசிரியர் நா. பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், இன்று (நேற்று) முதல் எதிர்வரும் 16 ஆம் திகதி வரை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வானிலை சீரான நிலைமையில் காணப்படும்.
எனினும் ஒரு சில பகுதிகளில் அவ்வப்பொழுது மிதமான மழை கிடைக்கும் வாய்ப்புகள் காணப்படுகின்றன. அதேபோல மத்திய, ஊவா, சப்ரகமுவ, தெற்கு மற்றும் மேற்கு மாகாண பகுதிகளில் அவ்வப்பொழுது மழை கிடைக்கும் சாத்தியமுள்ளது.
அதேவேளை எதிர்வரும் 16 ஆம் திகதி தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் சிறிய அளவிலான காற்றுச் சுழற்சி ஒன்று உருவாகும் வாய்ப்புள்ளது.
இதனால் எதிர்வரும் 16 ஆம் திகதி முதல் 19 ஆம் திகதி வரை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணம் உட்பட்ட நாட்டின் பல பகுதிகளுக்கும் மிதமானது முதல் கனமான மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது. ஒரு சில இடங்களில் மிகக் கனமழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.
குறிப்பாக எதிர்வரும் 16 ஆம் திகதி முதல் வடக்கு,கிழக்கு, மத்திய, சப்ரகமுவ, ஊவா, வடமத்திய, மாகாணங்களில் கன மழை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது எனத் தெரிவித்துள்ளார்.


Recent Comments