Thursday, March 5, 2026
Huisதாயகம்யாழில் விசேட அதிரடிப் படையினர் அதிரடி சோதனை; போதைப் பொருட்களுடன் நால்வர் கைது..!

யாழில் விசேட அதிரடிப் படையினர் அதிரடி சோதனை; போதைப் பொருட்களுடன் நால்வர் கைது..!

யாழ்ப்பாணம் மற்றும் நல்லூர் பகுதிகளில் விசேட அதிரடிப் படையினர் நடத்திய சோதனை நடவடிக்கைகளின் போது நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.

இதன் போது ஒரு வாள், 4 கையடக்க தொலைபேசிகள், ஒரு மோட்டார் சைக்கிள், 860 போதை மாத்திரைகள் என்பன மீட்கப்பட்டது.

யாழ்ப்பாணம் விசேட அதிரடிப் படையினர் நடத்திய சோதனையின் போது 24 தொடக்கம் 28 வயதுக்குட்பட்ட நான்கு பேர் இவ்வாறு கைது செய்யப்பட்டனர்.

கைதான சந்தேக நபர்கள் மேலதிக விசாரணைகளுக்கு பின்னர் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments

error: Content is protected !!