இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மன்னார் மாவட்டக்கிளை உறுப்பினர்களை இன்று (12.01) வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மருத்துவர் ப.சத்தியலிங்கம் அவர்கள் சந்தித்து கலந்துரையாடியிருந்தார்.
கட்சியின் மன்னார் மாவட்டக்கிளை அலுவலகத்தில் இடம்பெற்ற மேற்படி சந்திப்பில் மன்னார் மாவட்டத்திற்குட்பட்ட உள்ளூராட்சி மன்றங்கள் தொடர்பில் விசேடமாக கலந்துரையாடப்பட்டது. உள்ளூராட்சி மன்ற தேர்தலின் பிற்பாடு சபைகளில் ஆட்சியமைத்தலின் போது ஏற்பட்ட பின்னடைவு தொடர்பில் இதன் போது விவாதிக்கப்பட்டது.

மேலும் சமகால அரசியல் நிலவரங்கள் உட்பட கட்சியின் எதிர்கால செயற்பாடுகள், வேலைத்திட்டங்கள் தொடர்பிலும் இதன் போது கலந்துரையாடப்பட்டது.

இச்சந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினர் மருத்துவர் ப.சத்தியலிங்கம், தமிழரசுக் கட்சியின் மன்னார் மாவட்ட உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்கள், கட்சியின் மன்னார் மாவட்டக் கிளை உறுப்பினர்கள் கலந்துகொண்டிருந்தனர்.


Recent Comments