Wednesday, January 14, 2026
Huisதாயகம்பெண்ணை துஸ்பிரயோகம் செய்து இரு பியர் போத்தல்களை சொருகியவர்கள் கைது..!

பெண்ணை துஸ்பிரயோகம் செய்து இரு பியர் போத்தல்களை சொருகியவர்கள் கைது..!

வயிற்று வீக்கம் மற்றும் அதிக இரத்தப் போக்கு காரணமாக சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஒரு பெண்ணின் கருப்பையில் இருந்து இரண்டு கண்ணாடிப் போத்தல்களை மாரவில ஆதார மருத்துவமனை மருத்துவர்கள் வெற்றிகரமாக அகற்றியுள்ளனர்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண் நாத்தாண்டியா பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய பெண். கடந்த மாதம் 9 ஆம் திகதி 1990 அவசரசேவை நோயாளர் காவு வண்டி மூலம் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அந்தப் பெண்ணுக்கு பல பரிசோதனைகள் செய்யப்பட்டன.

மேலும் அவரை ஸ்கான் செய்ய பரிந்துரைத்த பிறகு, பெண்ணின் வயிற்றில் இரண்டு போத்தல்கள் இருப்பது கண்டறியப்பட்டது. அதைத் தொடர்ந்து நடந்த அறுவை சிகிச்சையின் போது இரண்டு போத்தல்களையும் மருத்துவர்கள் அகற்றியுள்ளனர்.

இது தொடர்பாக நோயாளியை மேலும் விசாரித்த போது, ​​

அவர் தேங்காய் சார்ந்த உற்பத்தி நிறுவனத்தில் பணிபுரிவதாகவும், ஜனவரி 1 ஆம் திகதி நிறுவனத்தின் உரிமையாளரின் வீட்டில் ஒரு விருந்து நடைபெற்றதாகவும் கூறினார். விருந்தின் போது, ​​நிறுவனத்தில் பணிபுரியும் இரண்டு நபர்களுடன் மது அருந்தியதாகவும், குடிபோதையில் இருந்த போது, ​​அவர்கள் மீண்டும் மீண்டும் தன்னை துஷ்பிரயோகம் செய்ததாகவும், பின்னர் இரண்டு போத்தல்களை அவரது அந்தரங்க உறுப்புகளில் செருகியதாகவும் அவர் கூறியுள்ளார்.

உடல்நிலை பாதிக்கப்பட்டதால் கடந்த சில நாட்களாக தனியார் சிகிச்சை பெற்று வந்ததாகவும், தனது உடல்நிலை மோசமடைந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

நத்தாண்டிய-வலஹாபிட்டிய மற்றும் பனங்கொட பகுதிகளைச் சேர்ந்த 51 மற்றும் 56 வயதுடைய இருவரையும், அந்த நிறுவனத்தின் உரிமையாளர் எனக் கூறப்படும் 47 வயதுடைய பெண்ணையும் மாரவில பொலிசார் கைது செய்துள்ளனர்.

சந்தேக நபர்கள் மூவரையும் மாரவில நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய பின்னர் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

RELATED ARTICLES
- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments

error: Content is protected !!