எதிர்வரும் 2ம் திகதி இடம்பெறவுள்ள கிவுல் ஓயா தமிழர் நில ஆக்கிரமிப்புக்கு எதிரான போராட்டத்திற்கு பொதுமக்கள், பொது அமைப்புக்கள், வடக்கு கிழக்கு பாராளுமன்ற உறுப்பினர்கள், தவிசாளர்கள், உபதவிசாளர்கள், உறுப்பினர்கள், ஒன்றிணைந்த தமிழ்க் கட்சிகளின் முக்கியஸ்தர்கள், ஒன்றிணைந்த செயற்பாட்டாளர்கள் அனைவரும் உணர்வுபூர்வமாக கலந்து கொள்ளுமாறு வவுனியா வடக்கு பிரதேச சபையின் தவிசாளர் திருநாவுக்கரசு கிருஸ்ணவேணி கோரிக்கை விடுத்துள்ளார்.

எதிர்வரும் 02.02.2026 ஆம் திகதி காலை 10 மணிக்கு நெடுங்கேணி பேரூந்து நிலையத்திற்கு முன்பாக ஆரம்பமாகும் இப் போராட்டத்திற்கு அனைவரும் ஒன்றிணைந்து வருகைதந்து எமது தமிழர்களின் பூர்வீக நில ஆக்கிரமிப்புக்கும் திட்டமிட்ட இனப் பரப்பலை மாற்றியமைக்கும் செயற்பாடுகளுக்கும் எதிராக குரல் கொடுக்குமாறு உரிமையுடன் வேண்டிக் கொள்வதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்


Recent Comments