Tuesday, February 3, 2026
Huisதாயகம்வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம்; நாகமுத்து பிரதீபராஜா வெளியிட்ட தகவல்..!

வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம்; நாகமுத்து பிரதீபராஜா வெளியிட்ட தகவல்..!

இலங்கையின் தென்பகுதியில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் தற்போது கிடைத்து வரும் மழை எதிர்வரும் 04ஆம் திகதி வரையில் தொடரும் வாய்ப்புள்ளது என யாழ்.பல்கலைக்கழக புவியியல் துறை பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.

அது தொடர்பில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தற்போது நாட்டின் பல பகுதிகளிலும் கிடைத்து வரும் மழை மத்திய, வட மத்திய, வட மேல், ஊவா, சபரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் எதிர்வரும் 04ஆம் திகதி வரை தொடரும் வாய்ப்புள்ளது.

வடக்கு மாகாணத்தின் பல குளங்கள் மீண்டும் வான் பாயத் தொடங்கியுள்ளன. மழை தொடரும் வாய்ப்புள்ளதனால் இந்த நிலைமையும் எதிர்வரும் 04ஆம் திகதி வரை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே குளங்களின் வான் பாயும் தாழ் நிலப்பகுதிகளில் உள்ள மக்கள் இது தொடர்பாக விழிப்பாக இருப்பது அவசியம்.

அத்துடன் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நெல் அறுவடை மற்றும் நெல் உலர விடும் செயற்பாடுகளை மேற்கொள்ளும் விவசாயிகள் இந்த நாட்களில் இந்த செயற்பாடுகளைத் தவிர்க்கவும்.

விதைப்புக்காலத்தின் சீரற்ற மழை, டிட்வா புயல் மற்றும் வெள்ளம், நோய்கள் , குறைவான சந்தை விலை போன்ற பல நெருக்கடிகளில் நெற்செய்கையை மேற்கொண்டுள்ள விவசாயிகள் உங்கள் நெல் அறுவடையையும் நெல் உலர விடும் செயற்பாட்டினையும் திட்டமிட்டு மேற்கொண்டு அவற்றைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள் என தெரிவித்துள்ளார்.

RELATED ARTICLES
- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments

error: Content is protected !!