கணினி சார்ந்த குற்றங்களைத் தடுப்பதற்காக புதிய பொலிஸ் பிரிவொன்றை நிறுவ நடவடிக்கை எடுக்கப்படுவதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
நாட்டில் தற்போது நாளொன்றுக்கு 23 முதல் 25 வரையான சைபர் குற்றங்கள் பதிவாகின்றன. கடந்த காலங்களை விட தற்போது கணிசமான அளவு சைபர் குற்றங்கள் அதிகரித்துள்ளன

எனவே, இந்தக் குற்றங்களை வினைத்திறனுடன் விசாரணை செய்து தீர்ப்பதற்குத் தேவையான புதிய தொழில்நுட்பம், விசேட அறிவு மற்றும் பொலிஸ் திணைக்களத்தை நவீனமயமாக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன.
அத்துடன் பொலிஸ் சேவையை மிகவும் சிறந்த, வினைத்திறனான மற்றும் ஊழலற்ற திணைக்களமாக மாற்றுவதே அரசாங்கத்தின் பிரதான நோக்கம் என்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சுட்டிக் காட்டியுள்ளார்.


Recent Comments