ஈரானின் முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய ‘வியூக ஆலோசனைச் சபையின்’ உறுப்பினருமான மஹ்மூத் அஹ்மதிநெஜாத் அமெரிக்க – இஸ்ரேலிய தாக்குதல்களில் கொல்லப்பட்டதாக ஈரானிய அரசு ஊடகங்கள் ஞாயிற்றுக்கிழமை செய்தி வெளியிட்டுள்ளன.
சனிக்கிழமை இரவு தலைநகர் தெஹ்ரானை குறிவைத்து நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலின் போது முன்னாள் தலைவர் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.

சுருக்கமான செய்திக் குறிப்பில், அஹ்மதிநெஜாத் அவரது பல தோழர்களுடன் சேர்ந்து கொல்லப்பட்டதாக அதிகாரபூர்வ ஈரானிய நிறுவனங்கள் உறுதிப்படுத்தின
2005 ஆம் ஆண்டு முதல் 2013 ஆம் ஆண்டு வரை ஈரானின் ஜனாதிபதியாகப்த மஹ்மூத் அஹ்மதி நெஜாட் பதவி வகித்தார்.
வடகிழக்கு தெஹ்ரானின் ‘நர்மக்’ (Narmak) பகுதியில் அமைந்துள்ள அஹ்மதி நெஜாட்டின் உத்தியோகபூர்வ இல்லத்தை இலக்கு வைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.


Recent Comments