Sunday, April 5, 2026
Huisதாயகம்ஆசிரியர்களின் கைகளை கட்டும் சட்டம்; பாடசாலை மோதலில் 15 வயது மாணவன் பலி..!

ஆசிரியர்களின் கைகளை கட்டும் சட்டம்; பாடசாலை மோதலில் 15 வயது மாணவன் பலி..!

தென்னிலங்கை பாடசாலை ஒன்றில் நண்பர்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் மாணவன் உயிரிழந்த சம்பவம் துயரத்தையும் அதிர்ச்சியைம் ஏற்படுத்தியுள்ளது.

​லுனுகம்வெஹெர – மத்தல பகுதியில் உள்ள பாடசாலையில் இடம்பெற்ற சம்பவம் நாட்டை உலுக்கியுள்ளது.​

கடந்த மார்ச் 23ஆம் திகதி பாடசாலை விளையாட்டுப் போட்டியின் இடைவேளையின் போது, தண்ணீர் குடிக்கச் சென்ற இடத்தில் 11ஆம் தர மாணவனுக்கும், 10ஆம் தர மாணவனுக்கும் இடையே சிறு வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.

இது பின்னர் கைகலப்பாக மாறிய நிலையில், ஆசிரியர்கள் தலையிட்டு நிலைமையைக் கட்டுப்படுத்தினர்.​பாடசாலை முடிந்து வீடு திரும்பிய மாணவன், கடும் வாந்தி மற்றும் தலைவலியால் துடித்துள்ளார்.

பெற்றோர் கேட்ட போது, “விளையாடும் போது தவறி விழுந்து விட்டேன்” என்று கூறி உண்மையை மறைத்துள்ளார்.​

வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட மாணவனைப் பரிசோதித்த போது மாணவனின் மூளையினுள் பலத்த இரத்தக் கசிவு ஏற்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. கராப்பிட்டிய வைத்தியசாலையில் அவசர அறுவை சிகிச்சை செய்யப்பட்டும், அந்த உயிர் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் பிரிந்தது.​

தாக்குதல் நடத்திய 16 வயது மாணவன் மத்தல பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். தற்போது மாணவன் உயிரிழந்துள்ளதால், இந்த வழக்கு மிகத் தீவிரமாக விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றது.

இதேவேளை சட்டதங்களின் மூலம் அதிபர், ஆசிரியர்களின் கைகள் கட்டப்பட்டுள்ள நிலையில் குறித்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments

error: Content is protected !!