Friday, July 17, 2026
Huisதாயகம்வவுனியாவின் பாடசாலைகளுக்குள் திடீரெனக் களமிறங்கிய வடக்கின் கல்விச் செயலாளர்..!

வவுனியாவின் பாடசாலைகளுக்குள் திடீரெனக் களமிறங்கிய வடக்கின் கல்விச் செயலாளர்..!

இன்றைய தினம் 17.7.2026 வெள்ளிக் கிழமை வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் திரு. பற்றிக் டிறஞ்சன் அவர்கள் வவுனியாவின் பல பகுதிகளுக்கு திடீர் கள விஜயம் ஒன்றினை மேற்கொண்டிருந்தார்

அந்த வகையில் செட்டிகுள கோட்டத்தின் செட்டிகுளம் மகா வித்தியாலயம், அல்காமியா ம.வி உட்பட பல பாடசாலைகளுக்கு திடீர் விஜயம் ஒன்றினை மேற்கொண்டு பாடசாலைகளின் குறை நிறைகளை பாடசாலைகளின் அதிபர் உள்ளிட்ட குழுவினரிடம் நேரடியாக கேட்டறிந்து கொண்டதுடன் தவணைப் பரீட்சை தொடர்பிலும், மாணவர்களின் கற்றல் செயற்பாடுகள் தொடர்பிலும் சாதாரண தர மாணவர்களிடம் நேரடியாக கேட்டறிந்து கொண்டார்.

இக் கள விஜயத்தில் வவுனியா தெற்கு வலயக் கல்விப் பணிப்பாளர் திரு முகுந்தன், பிரதிக் கல்விப் பணிப்பாளர் (பொது நிர்வாகம்) ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.

அதன் பின்னர் மதியம் 2.30 அளவில் தெற்குக் கல்வி வலய அதிபர்களுடன் எதிர்வரும் காலத்தில் நடைபெறவுள்ள பொதுப் பரீட்சைகளில் பெறுபேறுகளை அதிகரிப்பது தொடர்பாக ஒழுங்கு செய்யப்பட்டிருந்த விசேட கலந்துரையாடலில் கலந்து கொண்டதுடன் ஆக்கபூர்வமான பல ஆலோசனைகளையும் முன்வைத்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES
- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments

error: Content is protected !!