நண்பனின் 11 வயது மகளை பாரதூரமான பாலியல் துஸ்பிரயோகத்துக்கு உள்ளாகிய நபருக்கு 40 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி ஏ.ஏ.ஆனந்தராஜா உத்தரவிட்டார்.
கடந்த 2015, 2016 ஆம் ஆண்டு காலப்பகுதியில் வவுனியா, தரணிக்குளம் பிரதேசத்தில் தாயினால் கைவிடப்பட்டு தந்தையின் பராமரிப்பின் கீழ் இருந்த பெண் பிள்ளையை துஸ்பிரயோகப்படுத்திய 36 வயதான நபருக்கு எதிராக வவுனியா பொலிஸாரினால் 2016 ஆம் ஆண்டு பீ7 அறிக்கை வவுனியா நீதிவான் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
வழக்கு விசாரணைகளின் தொடர்ச்சியாக குறித்த எதிரிக்கு எதிராக 2025 ஆம் ஆண்டு சட்டமா அதிபர் திணைக்களத்தால் குற்ற பகிர்வு பத்திரம் வவுனியா மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டது


Recent Comments