Monday, August 10, 2026
Huisதாயகம்மாணவியை நூலகத்தில் வைத்து கதவை பூட்டி வீட்டிற்குச் சென்ற ஊழியர்கள்..!

மாணவியை நூலகத்தில் வைத்து கதவை பூட்டி வீட்டிற்குச் சென்ற ஊழியர்கள்..!

மகரகம நகர சபை வளாகத்தில் அமைந்துள்ள பொது நூலகத்தில் படித்துக் கொண்டிருந்த உயர்தர மாணவி ஒருவர், அங்குள்ள அதிகாரிகளின் கவனக் குறைவு காரணமாக கதவுகள் பூட்டப்பட்டு சென்றதால் சுமார் அரை மணி நேரம் சிக்கிக் கொண்ட சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்துமாறு நகர சபை உறுப்பினர் ராசிகா குணசிங்க கோரிக்கை விடுத்தார். கடந்த 07ஆம் திகதி நடைபெற்ற மகரகம நகர சபையின் மாதாந்த கூட்டத்தில் அவர் இந்த தகவலை வெளிப்படுத்தினார்.

தேசிய மக்கள் சக்தியின் சமன் சமரகோன் தலைமையில் நடைபெற்ற இந்த நகர சபை கூட்டத்தில் மேலும் கருத்து தெரிவித்த ராசிகா குணசிங்க,

17 வயதுடைய இந்த மாணவி நூலகத்தின் மேல் மாடியில் படித்துக் கொண்டிருந்து கீழே வந்த போது அதிகாரிகள் கதவுகளையும் ஜன்னல்களையும் மூடிவிட்டு வீட்டிற்குச் சென்றிருந்தனர்.

அங்கு யாரும் இல்லாததால் பயந்துபோன மாணவி சத்தமிட்டு அழுதார், வீதியில் சென்ற இரண்டு குழந்தைகளுக்கு அந்த சத்தம் கேட்டு நகர சபை ஊழியர்களுக்கு அறிவித்துள்ளனர்

பின்னர் இரண்டு தொழிலாளர்கள் கூரையின் வழியாக நூலகத்திற்குள் குதித்ததால் மாணவி மேலும் பயந்துபோனார், பின்னர் வேறொருவர் சாவியைக் கொண்டுவந்து கதவைத் திறந்து அவரை வெளியே கொண்டுவந்தார்.

அந்த நேரத்தில் அங்கு இருந்த ஒரு தொழிலாளி மாணவியை காணொளி எடுத்ததால் மாணவி கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகி முகத்தை மூடிக்கொண்டிருந்தார் என்றும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தங்கள் பொறுப்புகளைத் தட்டிக்கழித்துள்ளனர் என்றும் உறுப்பினர் சபையில் தெரிவித்தார்.

இந்த சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த நகர சபை தலைவர் சமன் சமரகோன் , இது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் வாக்குமூலங்கள் பெறப்பட்டு அறிக்கைகள் கிடைத்துள்ளதாகவும் தெரிவித்தார்.

RELATED ARTICLES
- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments

error: Content is protected !!