Sunday, August 16, 2026
Huisதாயகம்கரைத்துறைப்பற்று உபதவிசாளர் உள்ளிட்ட 5 பேர் ஹெரோயினுடன் கைது..!

கரைத்துறைப்பற்று உபதவிசாளர் உள்ளிட்ட 5 பேர் ஹெரோயினுடன் கைது..!

முல்லைத்தீவு – முள்ளியவளை பகுதியில் இருந்து செம்மலை – கொக்கிளாய் வீதியில் வாகனத்தில் பயணித்துக் கொண்டிருந்த கரைத்துறைப்பற்று பிரதேச சபையின் உபதவிசாளர் உள்ளிட்ட ஐவர், ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொக்கிளாய் பொலிஸார் நேற்று (15) மாலை மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போதே குறித்த ஐவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது, சந்தேகநபர்களிடமிருந்து சுமார் 2 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களும், கைப்பற்றப்பட்ட சான்றுப் பொருட்களும் கொக்கிளாய் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன், அவர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

கைது செய்யப்பட்ட உபதவிசாளர், கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலின்போது அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் போனஸ் ஆசனம் ஊடாக சபைக்கு தெரிவாகி, பின்னர் உபதவிசாளராக தெரிவு செய்யப்பட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES
- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments

error: Content is protected !!