கிளிநொச்சி, முரசுமோட்டை பகுதியில் உழவு இயந்திரத்தின் சக்கரத்தில் சிக்கி 3 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
முரசுமோட்டை சேர்ந்த சிறுவன் தனது சகோதரருடன் சேர்ந்து வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த உழவு இயந்திரத்தின் ‘டிரெய்லர்’ பகுதியில் விளையாடிக் கொண்டிருந்தான்.
அப்போது, அங்கு வந்த உறவினர் ஒருவர் உழவு இயந்திரத்தில் சிறுவர்கள் இருப்பதை அறியாமல், அதை இயக்கி முற்றத்தில் திருப்ப முயன்றுள்ளார். எதிர்பாராதவிதமாக உழவு இயந்திரத்தின் இருந்து கீழே விழுந்த சிறுவன், அதன் பின்சக்கரத்தில் சிக்கி பலத்த காயமடைந்தான்.
உடனடியாக மீட்கப்பட்ட சிறுவன் சிகிச்சைக்காக கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான்.
இச்சம்பவம் தொடர்பாக உழவு இயந்திரத்தை இயக்கிய சாரதியை கைது செய்துள்ள கிளிநொச்சி பொலிஸார், மேலதிக விசாரணைகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.


Recent Comments