Saturday, August 29, 2026
Huisதாயகம்வெளிநாடுகளில் தலைமறைவாகியிருந்த 67 குற்றவாளிகள் நாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளனர்..!

வெளிநாடுகளில் தலைமறைவாகியிருந்த 67 குற்றவாளிகள் நாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளனர்..!

வெளிநாடுகளில் தலைமறைவாகியிருந்த 67 திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகள் இதுவரை நாட்டிற்கு அழைத்துவரப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.

கல்கமுவ பகுதியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே அமைச்சர் இதனை கூறினார்.

திட்டமிட்ட குற்றங்களுக்கும் போதைப்பொருள் கடத்தலுக்கும் இடையிலான தொடர்புகள் வெளிக்கொணரப்பட்டுள்ளதாகவும் அதனுடன் காணப்பட்ட அரசியல் தொடர்புகள் நீக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

இதுவரை காணப்பட்ட அரசியல் கலாசாரம் மாற்றப்பட்டுள்ளதாகவும் எதிர்கால சந்ததியினருக்கு சிறந்த அரசியல் கலாசாரத்தை கொண்ட நாட்டை உருவாக்கிக் கொடுப்பதற்கு அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாகவும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.

RELATED ARTICLES
- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments

error: Content is protected !!