Friday, September 4, 2026
Huisதாயகம்தமிழ் மக்கள் கூட்டணியின் பிரதேச சபை உறுப்பினராக தமிழழகன் நியமனம்..!

தமிழ் மக்கள் கூட்டணியின் பிரதேச சபை உறுப்பினராக தமிழழகன் நியமனம்..!

தமிழ் மக்கள் கூட்டணியின் வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் கெளரவ உறுப்பினராக தனபாலசுந்தரம் தமிழழகன் அவர்கள் கட்சியின் செயலாளர் நீதியரசர் C.V. விக்னேஷ்வரன் அவர்களால் நியமிக்கப்பட்டுள்ளார்.

வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபைக்கு சுழற்சி முறையில் இவ் நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

தமிழ் மக்கள் கூட்டணியின் வவுனியா மாவட்ட இணைப்பாளராகவும் இவர் செயற்பட்டு வருகின்றார்.

இவர் தனது உயர் கல்வியை லண்டனில் மேற்கொண்டதுடன் யுத்த காலத்தில் வன்னி பெருநிலமெங்கும் பல்வேறு பாரிய அபிவிருத்தி செயற்பாடுகளை முன்னெடுத்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES
- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments

error: Content is protected !!