தியாக தீபம் திலீபனின் நினைவு நாளை ஈழத் தமிழர்கள் உணர்வுடன் கடைப்பிடித்த நிலையில், யாழ்ப்பாணம் நல்லூரில் அமைக்கப்பட்டிருந்த அவரது உருவச்சிலையை பொலிஸார் அகற்றிச் சென்றிருப்பது வேதனையையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்துவதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் தெரிவித்துள்ளார்.
தங்களுக்காக போராடி உயிர்நீத்தவர்களை நினைவுகூரும் மக்களின் உரிமையில் பொலிஸார் தலையிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
உண்ணாமலும் நீர் அருந்தாமலும் அகிம்சை வழியில் மக்களுக்காக உயிர்துறந்த திலீபன் மறைந்து 39 ஆண்டுகள் கடந்த பின்னரும், அவரது உருவச் சிலையைக் கூட ஏற்றுக் கொள்ள முடியாத நிலை ஏன் ஏற்பட்டுள்ளது என சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
திலீபனின் நினைவுகளை அகற்றுவதன் மூலம் தமிழர்களின் வரலாற்றையோ, அவர்களின் நினைவுகளையோ அழிக்க முடியாது எனவும், சிலையை அகற்றினாலும் திலீபனை தமிழர்களின் நெஞ்சிலிருந்து அகற்ற முடியாது எனவும் சீமான் தெரிவித்துள்ளார்.


Recent Comments