Wednesday, February 5, 2025
Huisதாயகம்யாழில் ஜே.வி.பி காவாலிகளின் கொடூரத் தாக்குதல்; பொலிசாரால் மூவர் கைது..!

யாழில் ஜே.வி.பி காவாலிகளின் கொடூரத் தாக்குதல்; பொலிசாரால் மூவர் கைது..!

ஜே.வி.பி மற்றும் புலனாய்வாளர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருப்பவர்கள் என பொது மக்களால் கூறப்பட்டவர்கள் நேற்று இரவு யாழ் நகரில் ஆட்டோக்களை ஆபத்தான முறையில் ஓடியும் இளைஞன் ஒருவனை கொடூரமாகத் தாக்கியும் பெரும் அட்டகாசத்தில் ஈடுபட்டிருந்தனர்.

வன்முறையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் மூன்று இளைஞர்கள் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டதுடன் இரண்டு முச்சக்கரவண்டிகளும் கைப்பற்றப்பட்டது.

அரியாலை மற்றும் பொம்மை வெளி பகுதியை சேர்ந்த மூவர் யாழ்ப்பாணம் பொலிஸ் புலனாய்வு பிரிவினரால் இன்றைய தினம் வியாழக் கிழமை கைது செய்யப்பட்டனர்.

யாழ் நகரில் புத்தாண்டுக்கு முன்தினம் (31) இரவு வேளை ஒன்றுகூடிய இளைஞர்கள் குழுவினர் முச்சக்கரவண்டியில் சாகசம் காட்டியதுடன் இளைஞர் ஒருவரை கடுமையாக தாக்கியிருந்தனர்.

இது தொடர்பிலான காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில் இது தொடர்பில் சம்பந்தப்பட்டவர்கள் மீது உடன் நடவடிக்கை எடுக்ககோரி பல்வேறு தரப்பில் இருந்தும் அழுத்தங்கள் ஏற்பட்ட நிலையில் , குறித்த காணொளியை அடிப்படையாக கொண்டு யாழ் பொலிஸ் புலனாய்வு பிரிவினர் முன்னெடுத்த விசாரணையின் போது அடையாளம் காணப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.

குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் சிலர் தலைமறைவாகியுள்ள நிலையில், குறித்த நபர்களை கைது செய்ய பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

குறித்த தாக்குதலில் காயமடைந்த இளைஞன் யாழ்ப்பாணம் போதனா வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

RELATED ARTICLES
- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments

error: Content is protected !!