Wednesday, February 5, 2025
Huisஉலகம்ஈரான் இராணுவத்தில் இணையும் ஆயிரம் ட்ரோன்கள் - தரைப் படைகளின் தளபதி

ஈரான் இராணுவத்தில் இணையும் ஆயிரம் ட்ரோன்கள் – தரைப் படைகளின் தளபதி

ஈரான் இராணுவம் தனது படைகளில் 1,000 மூலோபாய ட்ரோன்களை விரைவில் சேர்க்கவுள்ளதாக அறிவித்துள்ளது, இது நாட்டின் பாதுகாப்பு திறன்களை அதிகரிக்கச் செய்யுமென தெரிவிக்கப்படுகிறது.

ஈரான் இராணுவத்தின் மக்கள் தொடர்புகளின் அறிக்கையின்படி, பாதுகாப்பு மற்றும் ஆயுதப்படை தளவாட அமைச்சகத்துடன் இணைந்து இராணுவத்தால் வடிவமைக்கப்பட்டு தயாரிக்கப்பட்ட இந்த ட்ரோன்கள் வரும் நாட்களில் இராணுவத்தில் சேர உள்ளன.

வியாழக் கிழமை(09) நடந்த ஒரு விழாவின் போது, ​​ஈரானின் இராணுவ தரைப் படைகளின் தளபதி பிரிகேடியர் ஜெனரல் கியோமர்ஸ் ஹெய்டாரி, இராணுவத்தின் தரைப் படைகள் மேம்பட்ட இராணுவ உபகரணங்கள் மற்றும் ஆயுதங்களைப் பெறுவதற்கான திறனை வலியுறுத்தினார்.

புதிய ஆயுதம் நான்கு அத்தியாவசிய திறன்களைக் கொண்டுள்ளது என்பதை அவர் எடுத்துரைத்தார்: நீண்ட தூரம், துல்லியம், உளவுத்துறை மற்றும் நெட்வொர்க் நோக்குநிலை, இவை அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளப் பயன்படுத்தப்படும்.

சமீபத்திய ஆண்டுகளில் ஈரான் அதன் ட்ரோன் திறன்களை கணிசமாக மேம்படுத்தியுள்ளது. பிராந்தியத்திலும் அதற்கு அப்பாலும் ஆளில்லா வான்வழி தொழி நுட்பத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது.

RELATED ARTICLES
- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments

error: Content is protected !!