சுகாதார அமைச்சின் நிர்வாக செயல்முறைகளில் அரசியல் தலையீடு இருப்பதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் காரணமாக, சுகாதார அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜெயதிஸ்ஸவுடன் உடனடியாக ஒரு சந்திப்பை நடத்த அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) அழைப்பு விடுத்துள்ளது.
அரசு மருத்துவ அதிகாரிகள் சங்க செயலாளர் வைத்தியர் பிரபாத் சுகததாச வெளியிட்ட செய்திக் குறிப்பில்,
சில அமைச்சக அதிகாரிகள் ஏற்கனவே உள்ள விதிமுறைகளை மீற முயற்சித்ததால், 2025 ஆம் ஆண்டு மருத்துவர்களுக்கான இடமாற்றப் பட்டியல் பல மாதங்களாக தாமதமாகி வருவதாகக் கூறினார். இந்த தாமதம் 5,000 க்கும் மேற்பட்ட மருத்துவர்களை அது பாதித்ததாகக் கூறப்படுகிறது.
இந்த இடமாற்றச் செயல்முறை நிறுவனக் குறியீடு, பொது சேவை ஆணைக் குழுவின் நடைமுறை விதிகள் மற்றும் அமைச்சக சுற்றறிக்கைகளால் நிர்வகிக்கப்படுகிறது என்று வைத்தியர் சுகததாச வலியுறுத்தினார்.
வெளிப்படைத் தன்மையை உறுதி செய்வதற்கும் அரசியல் செல்வாக்கைத் தடுப்பதற்கும் மருத்துவ இடமாற்ற சபைகள் இந்த செயல்முறையை மேற்பார்வையிட வேண்டும்.
இது தொடர்பாக கொழும்பு ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவித்த GMOA ஊடகப் பேச்சாளர் வைத்தியர் சமில் விஜேசிங்க, பொது சுகாதாரத்தில் இத்தகைய தலையீட்டின் தாக்கம் குறித்து கவலை தெரிவித்தார்.
Recent Comments