Wednesday, February 5, 2025
Huisதாயகம்வவுனியா வடக்கு வலயத்தில் நடைபெற்ற நிதி மோசடி; நடந்தது என்ன?

வவுனியா வடக்கு வலயத்தில் நடைபெற்ற நிதி மோசடி; நடந்தது என்ன?

வவுனியா வடக்கு வலயத்தில் நடைபெற்ற பாரிய நிதி மோசடி தற்போதய சூழலில் பேசு பொருளாகியுள்ள நிலையில் நடுநிலை தவறாது உள்ளதை உள்ளவாறு வெளிப்படுத்த வேண்டியது ஊடக தர்மம் என்ற வகையில் வெளிப்படுத்துகின்றோம்.

இது தொடர்பில் நீதியான விசாரணை நேரடியாக ஜனாதிபதியால் நடாத்தப்படும் பட்சத்தில் எமக்குத் தெரிந்த உண்மைகளையும் பகிரத் தயாராக இருக்கின்றோம் என்பதை உறுதியுடன் தெரிவித்துக் கொள்கின்றோம்.

வவுனியா வடக்கு கல்வி வலயம் உட்பட அரச திணைக்களங்களில் கடமை புரியும் ஆளணியினரின் சம்பளப் பட்டியல் கணினி மென்பொருள் ஊடாக கணிப்பிடப்பட்டு வங்கியில் வைப்பிலிடப்படுகிறது.

வவுனியா வடக்கு கல்வி வலய ஆளணியினரின் சம்பளப் பட்டியல் மிகுதி சமப்படாத நிலையில் கணக்குக் கிளையில் பணிபுரிந்த அபிவிருத்தி அலுவலர் ஒருவரால் ஆராயப்பட்ட நிலையில் சில ஆசிரியர்களின் சம்பளப் பட்டியலில் அதிகளவு கொடுப்பனவு கணிப்பிடப்பட்டு முன்னர் பணியாற்றிய உத்தியோகஸ்தர் மற்றும் அவரின் நம்பிக்கைக்குரிய சிலரின் வங்கிக் கணக்குக்கு வைப்பிலிடப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டு அது தொடர்பில் வலயக் கல்விப் பணிப்பாளருக்கு அறிவிக்கப்பட்டது.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,

2018ஆம் ஆண்டு வவுனியா வடக்கு கணக்காளர் மாற்றத்தின் பின்னர் கணினி மென்பொருளில் சில ஆசிரியர்களின் சம்பளப் பட்டியலில் மோசடியாக கொடுப்பனவு மாற்றம் செய்யப்பட்டு குறித்த உத்தியோகஸ்தர் உட்பட சில அலுவலர்களின் வங்கிக் கணக்குக்கு வைப்பிலிடப்பட்டுள்ளது.

வவுனியாவைச் சேர்ந்த சம்பந்தப்பட்ட முகாமைத்துவ உதவியாளர், 2018ஆம் ஆண்டு தொடக்கம் 16 மில்லியன் ரூபாய் அரச நிதியை மோசடி செய்துள்ளார் என்பது வவுனியா வடக்கு வலயக் கல்வி அலுவலகத்தால் கண்டறியப்பட்டு வலயக் கல்விப் பணிப்பாளர் அன்னமலர் சுரேந்திரன் அவர்களால் மாகாணக் கல்வித் திணைக்களம் மற்றும் மாகாணக் கல்வி அமைச்சுக்கு உடன் அறிவிக்கப்பட்டது.(November 2020)

இதேவேளை வலயப் பணிப்பாளரின் அறிவித்தலுக்கு அமைய, குறித்த மோசடி தொடர்பில் வடக்கு மாகாண கல்வி அமைச்சு மற்றும் மாகாணக் கல்வித் திணைக்கள அதிகாரிகள் வவுனியா வடக்கு கல்வி அலுவலகத்துக்கு நேரில் சென்று ஆராய்ந்தனர் என்பதுடன் குறித்த மாகாண அலுவலர்கள் வருகை தந்த தினத்தில் குறித்த மோசடி செய்த அலுவலர் தான் மோசடி செய்த பணத்தை மீள ஒப்படைப்பதற்கு வலயக்கல்வி அலுவலகத்திற்கு வருகை தந்திருந்தார்.

எனினும் குறித்த தினத்தில் வலயத்தின் முழு அதிகாரமும் மாகாண அதிகாரிகளின் கையில் இருந்ததுடன் வருகை தந்த நபர் வாகன தரிப்பிடத்தில் நீண்ட நேரம் தரித்திருந்து பின்னர் வெளியேறிச் சென்றிருந்தார். எனவே குறித்த பணத்தை மீளப் பெறுவதற்கான சந்தர்ப்பம் இருந்த போதும் மாகாண அதிகாரிகளின் அசமந்தமே குறித்த பண இழப்பிற்குக் கரணமாக அமைந்தது.

இது தொடர்பில் தமிழர் ஆசிரியர் சங்கம் 7.11.2020 ஆண்டு தனது கண்டனத்தையும் வெளிப்படுத்தியிருந்துடன் ஊடக அறிக்கையையும் விடுத்திருந்தது.

அந்த அறிக்கையில்,

நிதி மோசடியில் ஈடுபட்டவர் இன்னும் கைது செய்யப்படாமை வேதனை தரும் விடயம் எனச் சுட்டிக் காட்டியுள்ள இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் சந்தேகத்தையும் கண்டனத்தையும் வெளியிட்டுள்ளது.

வவுனியா வடக்கு கல்வி வலயத்தில் இடம்பெற்றுள்ள நிதிமோசடி தொடர்பாக சம்பந்தப்பட்டவர் இன்னும் கைது செய்யப்படாமை வேதனையான விடயம் என்பதற்கு அப்பால் பல சந்தேகங்களையும் இவை உருவாக்குகின்றது.

நிதி மோசடியில் ஈடுபட்டவர் யார் என்பது கண்டறியப்பட்டுள்ளது. கல்வி வலயத்தில் மிகவும் நம்பிக்கைக்கு உரியவராக தன்னைக் காட்டிக் கொண்டு, உயர் அதிகாரிகளை ஏமாற்றி நிதி மோசடியில் ஈடுபட்டவரை சுதந்திரமாக நடமாட விட்டுவிட்டு, தற்போதுள்ள அபாயகரமான கொரோனா சூழ்நிலையில் பலரை கொழும்பிற்கு அழைத்து விசாரிப்பதன் மர்மம் என்ன? குற்றவாளி என கண்டறியப்பட்டவரை கைது செய்து அவரூடாக அனைத்தையும் அறிவதே பிரதானமான விடயம்.

சம்பந்தமில்லாதவர்களை அழைத்து விசாரணை நடாத்தினால் கிடைக்கப் போவது எதுவுமில்லை. மாறாக விசாரணை என்ற போர்வையில் இழுத்தடிப்புகள் மட்டுமே மிஞ்சும்.

ஆகையால் குற்றவாளி என இனங் காணப்பட்டவரை உடன் கைது செய்து உரிய இடத்தில் வைத்தே விசாரணை செய்யுமாறு இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதாவது வலய பணிப்பாளர் அன்னமலர் சுரேந்திரன் உட்பட வலய குழுவினரே குறித்த மோசடிகளைக் கண்டறிந்து வெளிப்படுத்தினர் என்பதே உண்மை.

RELATED ARTICLES
- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments

error: Content is protected !!