Wednesday, February 5, 2025
Huisதாயகம்எதேச்சதிராகப் போக்கில் தமிழக மீனவர்கள் – அமைச்சர் சந்திரசேகரன்

எதேச்சதிராகப் போக்கில் தமிழக மீனவர்கள் – அமைச்சர் சந்திரசேகரன்

தமிழக மீனவர்கள் எதேச்சதிகார போக்கில் இலங்கையின் கடல் வளங்களைச் சூறையாடுகிறன்றனர். அதனை தடுப்பதற்கே அரசாங்கம் சட்டத்தை கடுமையாக்கியுள்ளதுடன், கைதுகளையும் மேற்கொண்டு வருவதாக கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.

அயலக தமிழர் மாநாட்டில் கலந்து கொள்ளத் தமிழகம் சென்றிருந்த அமைச்சர் சந்திரசேகரன் தமிழக ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையில்,

”தமிழக மீனவர்களால் ஆந்திரா, கேரளா, குஜராத் அல்லது பாகிஸ்தான் கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட முடியுமா?. ஆனால், இலங்கை கடல் பரப்பில் மாத்திரம் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடுவதுடன், எதிர்கால தலைமுறையின் கடல்பரப்பையும் சூறையாடுகின்றனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு அனுப்பும் கடிதத்தில் தமிழக மீனவர்களின் அத்துமீறிய செயல்பாடுகள் குறித்து குறிப்பிடுவதில்லை.

யுத்தத்தால் நீண்ட காலம் பாதிக்கப்பட்ட மக்கள் தற்போதுதான் ஓரளவு மீண்டெழும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். அவர்களது வாழ்வாதாரம் சுரண்படும்போது அவர்களால் அடுத்த கட்டமாக என்ன செய்ய முடியும்?

ரோலர் படகுகள் மற்றும் சுருக்கு வலைகளை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ள போதிலும் அதனையே தொடர்ச்சியாக பயன்படுத்துகின்றனர். ஒருசில மீனவர்கள்தான் இவ்வாறு செயல்படுகின்றனர்.

தமிழக மீனவர்கள் எதேச்சதிரகாரப் போக்கில் இலங்கையின் கடல்வளங்களை சூறையாடுகிறன்றனர். இந்த செயல்பாட்டை வன்மையாக கண்டிக்கிறோம்.

தமிழக முதல்வரிடம் நாம் கோருவது ஒன்றுதான். பொட்டம் ட்ரோலிங் முறைமை எனப்படும் ரோலர் படகுகளில் சட்ட விரோதமாக மீன்பிடியில் தமிழக மீனவர்கள் மீன்பிடியில் ஈடுபடுவதை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்த முறையை தடை செய்ய வேண்டும்.

இலங்கையில் சட்டவிரோத மீன்பிடி முறை தடை செய்யப்பட்டுள்ளது. எமது எதிர்கால சந்ததியினருக்கு கடல் வளத்தை பாதுகாத்து கொடுக்க வேண்டும். அதனையே இந்தியாவிடமும் தமிழக முதல்வரிடமும் கோருகிறோம்.” என்றார்

இதேவேளை, 13ஆவது திருத்தச்சட்டத்தை அமுல்படுத்த சமகால அரசாங்கம் நடவடிக்கையெடுக்குமான ஊடகங்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர்,

இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் உள்ளூராட்சிமன்றத் தேர்தல் நடத்தப்படும். அதன் பின்னர் வருடத்தின் இறுதியில் அல்லது 2026ஆம் ஆண்டு ஆரம்பத்தில் மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படும். மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படுவதே 13ஆவது திருத்தச் சட்டத்தின் பிரகாரம்தான்.

13ஆவது திருத்தச் சட்டம் என்பது இலங்கையின் அரசியலமைப்பின் ஒரு பகுதியாகும். அதனை அமுல்படுத்த வேண்டியதில்லை. அது அரசியலமைப்பில் உள்ளது. ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவும் இந்தச் சட்டத்தை ஏற்றுக் கொண்டுள்ளார்.

13ஆவது திருத்தச் சட்டத்தை தமிழ் மக்கள் தமக்கான தீர்வாக கருதுவதால் அதனை நாம் எதிர்க்கப்போவதில்லை என்றும் ஜனாதிபதி கூறியுள்ளார்.

ஆனால், எம்மை பொறுத்தமட்டில் தமிழ் மக்களுக்கு இதனையும் தாண்டிய பிரச்சினைகள் உள்ளன. அவற்றுக்கு தீர்வை காண இந்த முறையுடன் மேலும் பல விடயங்களை நாம் செய்ய வேண்டியுள்ளது.” என்றார்.

RELATED ARTICLES
- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments

error: Content is protected !!