எதிர்வரும் காலங்களில் 225 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் வாகனங்களை வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
நேற்றிரவு ஊடக நிறுவனம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனைக் கூறினார்.
அதேநேரம், இனிமேல் எந்தவொரு நாடாளுமன்ற உறுப்பினருக்கும் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான சிறப்பு அனுமதி வழங்கப்பட மாட்டாது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக விசேடமாக வாகனங்கள் இறக்குமதி செய்யப்படாது என பொது பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Recent Comments