23 ஆம் திகதி நள்ளிரவு முதல் தனியார் வகுப்புக்களுக்கு முழுமையாகத் தடை..!

23 ஆம் திகதி நள்ளிரவு முதல் பரீட்சைகள் நிறைவடையும் வரை தனியார் வகுப்புக்கள் நடாத்துவதற்கு தடை செய்யப்பட்டுள்ளது. கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை எதிர்வரும் மே மாதம் 29 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.இந் நிலையில், குறித்த விதிமுறைகளை மீறும் வகையில் செயற்பட்டால் அது தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் அல்லது பரீட்சை திணைக்களத்திற்கு தொடர்பு கொண்டு முறைப்பாடு செய்ய முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.