வடக்கு மாகாண புதிய ஆளுநராக மீண்டும் பி.எச்.எம் சாள்ஸ்; நாளை பதவியேற்பு?

வடக்கு மாகாண புதிய ஆளுநராக முன்னாள் வடக்கு ஆளுநர் திருமதி பி.எச்.எம் சாள்ஸ் நியமிக்கப்படலாம் என தெரிய வருகிறது.

வடக்கு மாகாண ஆளுநர் தெரிவில் பீப்பிள்ஸ் லீசிங்கின் பிரதம நிறைவேற்று அதிகாரி பிரதீப் அமிர்த நாயகம் மற்றும் சாள்ஸ் ஆகியோரின் பெயர்கள் பெயர்கள் முன்னனியில் இருந்ததாக தெரிய வருகிறது.வடக்கை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் கட்சிகளின் ஏகோபித்த ஆதரவுடன் வடமாகாண ஆளுநராக மீண்டும் திருமதி பி.எச்.எம் சாள்ஸ் நியமிக்கப்படவுள்ளதாக தெரிய வருகிறது.நாளை(17) நியமனக் கடிதம் வழக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.