சிறுவர் கடத்தல் தொடர்பில் பொலிஸாரால் எவ்வித அறிவித்தல்களும் வழங்கப்படவில்லை..!

அக்மீமன மற்றும் யக்கலமுல்ல பொலிஸ் பிரிவுகளில் சிறுவர்கள் கடத்தல் அல்லது முயற்சிக்கும் குழு தொடர்பில் சமூக ஊடகங்களில் எவ்வித அறிவித்தல்களும் பொலிஸாரால் வழங்கப்படவில்லை எனவும் அவை உண்மைக்கு புறம்பானவை எனவும் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் பொலிஸ் ஊடகப் பிரிவு விடுத்துள்ள விசேட அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

சமூக வலைத்தளங்களில் சிறுவர்களை கடத்த முயற்சிக்கும் குழுவொன்று தொடர்பில் அக்மீமன பொலிஸ் நிலையத்துக்கு தகவல் கிடைத்துள்ளதாக சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகள் உண்மைக்கு புறம்பானவை. அக்மீமன பொலிஸ் நிலையம் அதனை மறுத்துள்ளது.

அதற்கமைவாக சிறுவர்களை கடத்த முயற்சிக்கும் குழு தொடர்பில் அக்மீமன பொலிஸாரினால் சமூக ஊடகங்களில் ஊடாக எவ்வித அறிவித்தல்களும் வழங்கப்படவில்லை.அக்மீமன மற்றும் யக்கலமுல்ல பொலிஸ் பிரிவுகளில் அவ்வாறான சிறுவர் கடத்தல் அல்லது முயற்சிகள் எதுவும் பதிவாகவில்லை. இவ்வாறு பரப்படும் செய்திகள் உண்மைக்கு புறம்பானவை என ஊடகப் பிரிவு விடுத்துள்ள அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.