வவுனியா மற்றும் யாழில் சிறுமிகளான மகள்களை துஷ்பிரயோகம் செய்த இரு தந்தையர்கள் கைது..!

நான்கு சிறுமிகளை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் தந்தையர்கள் இருவரை பொலிஸார் நேற்று (17) கைது செய்துள்ளனர்.

சுன்னாகம் மற்றும் வவுனியா பொலிஸ் பிரிவுகளில் 4, 6, 9 மற்றும் 11 வயதுடைய நான்கு சிறுமிகள் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.சந்தேகநபர்களான இரண்டு தந்தையர்களுக்கும் தலா இரண்டு பெண் பிள்ளைகள் இருந்துள்ளதுடன், அவர்கள் நால்வரே இவ்வாறு துஷ்பிரயோகத்துக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது..இந்நிலையில் குறித்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

(Thamilan News)