மன்னாரில் 15 வயது பாடசாலை மாணவியைக் காணவில்லை..!

மன்னார் – முசலி பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பண்டாரவெளி, மணற்குளம் என்ற முகவரியில் வசிக்கும் ரிகாஷா (வயது- 15) என்ற மாணவியை நேற்று (18) காலையில் இருந்து காணவில்லை என பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.

குறித்த மாணவி பண்டாரவெளி முஸ்லிம் வித்தியாலயத்தில் தரம் 10 இல் கல்வி கற்று வருவதாக பெற்றோர் தெரிவித்துள்ளனர்.மாணவி காணாமல் போனமை தொடர்பாக நேற்றும், இன்றும் தேடிய பெற்றோர் மாணவி பற்றிய தகவல்கள் கிடைக்காததை தொடர்ந்து சிலாவத்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

முறைப்பாட்டை தொடர்ந்து இன்றைய தினம் (19) சிலாவத்துறை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டதாக குறித்த மாணவியின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.மேலும் குறித்த மாணவி பற்றிய தகவல்கள் ஏதும் தெரிந்தவர்கள் 074-2614797 எனும் மாணவியின் தந்தையின் தொலைபேசிக்கோ அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கோ தகவல்களை வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *