யுத்தக் குற்ற விவகாரம் தொடர்பில் கனேடியத் தூதரை எச்சரிக்க சிறிலங்காவுக்கு எந்த நியாயமும் இல்லை – கூட்டமைப்பு

இலங்கையில் இடம்பெற்ற இனப் படுகொலை தொடர்பான கனேடியப் பிரதமர் ஜெஸ்ரின் ட்ரூடோ வெளியிட்ட அறிக்கைக்கு கனேடிய உயர்ஸ்தானிரை அழைத்து சிறிலங்கா அரசாங்கம் தமது ஆட்சேபனைகளை தெரிவித்துள்ளமைக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு கண்டனம் வெளியிட்டுள்ளது.இலங்கையின் இறுதிக் கட்ட யுத்த காலப் பகுதியில் இடம்பெற்ற யுத்தக் குற்றங்கள் மற்றும் மனிதாபிமானத்திற்கு எதிரான குற்றங்கள் குறித்து எந்தவொரு விசாரணைகளையும் மேற்கொள்ளாத சிறிலங்கா அரசாங்கம் இவ்வாறு எதிர்ப்பு வெளியிடுவதில் எந்தவொரு நியாயமும் இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.என ஐ.பி.சி தமிழுக்கு வழங்கிய செவ்வியில் கருத்து வெளியிட்ட கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் சுட்டிக் காட்டியுள்ளார்.