மன்னாரில் கோர விபத்து; ஒருவர் பலி பலர் படுகாயம்..!

மன்னார் பிரதான பாலத்திற்கு அருகில் இடம் பெற்ற கோர விபத்தில் முச்சக்கரவண்டி சாரதி ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இந்த விபத்து சம்பவம் இன்றைய தினம் செவ்வாய் கிழமை(23) காலை 11 மணியளவில் இடம் பெற்றுள்ளது.

மேலும் குறித்த விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐவர் பலத்த காயங்களுடன் மன்னார் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.மேலும் தெரிய வருகையில்,

வவுனியா மாவட்டத்தை சேர்ந்த கணவன் மனைவி உட்பட 9 வயது, 6 வயது, 4 வயதுடைய மூன்று குழந்தைகள் உள்ளடங்களாக ஐவர் நாளைய இடம் பெறவுள்ள திருமண நிகழ்வு ஒன்றிற்கான முச்சக்கர வண்டி ஒன்றில் மன்னார் வருகை தந்த நிலையில் மன்னாரில் இருந்து தள்ளாடி நோக்கி பயணித்த மஹேந்திரா ரக வாகனம் கட்டுப்பாட்டை இழந்து முச்சக்கரவண்டியில் மோதிய நிலையில் முச்சக்கர வண்டி சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.அதே நேரம் பலத்த காயங்களுடன் ஏனையோர் மன்னார் பொது வைத்தியசாலையில் மேலதிக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் மன்னார் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.