எவரஸ்ற் சிகரத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அஞ்சலி செலுத்திய புலம்பெயர் தமிழன்..!

இலங்கையில் கடந்த 2009ஆம் ஆண்டு இடம்பெற்ற இறுதி யுத்தத்தில் பல தமிழ் மக்கள் கொல்லப்பட்டு 14 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டது.

இந்நிலையில்,உலக நாடுகள் பலவற்றிலும், குறிப்பாக, தமிழர்கள் வாழும் பகுதிகளிலும் இந்த முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலை நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டன.அந்த வகையில், இலங்கையில் பிறந்து இங்கிலாந்தில் புலம்பெயர்ந்து வாழும் விவேகானந்தன் துஷியந்தன் என்ற 46 வயதான நபர் முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் நினைவேந்தலை 8848 மீற்றர் உயரமான எவரெஸ்ட் சிகரத்தில் கடந்த மே மாதம் 18ஆம் திகதி அனுஷ்டித்துள்ளார்.தனது இனத்தின் மீதான பற்றும், நாட்டின் மீதான பற்றுமே தன்னை சிகரம் தொடுமளவு சாதிக்க வைத்ததாக கூறும் இவர், எவ்வளவு கஷ்டப்பட்டாலும் நாம் சாதிக்க வேண்டும் என உறுதிபட தெரிவிக்கிறார்.