நாட்டின் 90% பாடசாலைகளில் டெங்கு பரவுவதற்கு ஏதுவான சூழல்; விடுக்கப்பட்ட எச்சரிக்கை..!

நாட்டின் 90% பாடசாலைகளில் டெங்கு நுளம்பு பரவுவதற்கு ஏதுவான சூழல் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார தரப்பினர் தெரிவித்தனர்.

டெங்கு நோய்க்குள்ளாவோரில் 25 வீதமானோர் பாடசாலை சிறுவர்கள் என சுகாதார நிபுணர் திஸ்னக தசநாயக்க சுட்டிக்காட்டினார்.இதன் காரணமாக பாடசாலைகளை அண்மித்து டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டங்களை தீவிரப்படுத்த வேண்டிய அவசியம் காணப்படுவதாக அவர் வலியுறுத்தினார்.

எதிர்வரும் திங்கட்கிழமை (29) ஆரம்பமாகவுள்ள சாதாரண தர பரீட்சைக்கு முன்னதாக, பரீட்சை மத்திய நிலையங்களை அண்மித்து விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுவதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.இதனிடையே, நாடளாவிய ரீதியில் 61 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகள் டெங்கு அபாய வலயங்களாக பெயரிடப்பட்டுள்ளன.

அறநெறி பாடசாலைகள் மற்றும் சமய ஸ்தலங்களை அண்மித்த பகுதிகளில் நாளைய தினம் விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் வைத்தியர் லஹிரு கொடித்துவக்கு தெரிவித்தார்.