இன்றைய இராசி பலன்கள் (04.6.2024)

மேஷம்
எடுத்த காரியத்தில் ஏதாவது இடையூறால் அவதிப்படுவீர்கள். அஷ்டம சந்திரன் உங்களுக்கு கஷ்டத்தைக் கொடுப்பதில் ஆச்சரியமில்லை. புதிய முயற்சிகளைத் தள்ளிப் போட்டால் நஷ்டம் அடைய மாட்டீர்கள். ஒப்பந்தங்கள் செய்யும்போது இரண்டு மடங்கு எச்சரிக்கை தேவை. வண்டி வாகனங்களில் போகும்போது வேடிக்கை பார்க்காதீர்கள்.

ரிஷபம்
வியாபாரத்திற்கு உதவியான வெளிநாட்டு செய்தியால் மகிழ்ச்சி அடைவீர்கள். தொழிற்சாலைகளில் உற்பத்தியை பெருக்குவீர்கள். தொழிலில் உருவாகும் போட்டிகளைச் சுலபமாக முறியடிப்பீர்கள். மேலதிகாரிகளின் பாராட்டால் பரவசமடைவீர்கள். சிறு வியாபாரிகள் பல வகையில் அனுகூலம் பெறுவீர்கள். முக்கிய கடனை அடைப்பீர்கள்.

மிதுனம்
விருந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். ஆடல் பாடல் என்று இன்பமாகப் பொழுதைக் கழிப்பீர்கள். தொழிலில் சிறு தடங்கல் ஏற்பட்டாலும் புத்திசாலித்தனமாக அடுத்த கட்டத்திற்கு நகர்வீர்கள். பணியாளர்களை ஊக்கத்துடன் வேலை வாங்குவீர்கள். பணவரவு தாராளமாக இருப்பதால் நீண்ட கால கடன்களை அடைப்பீர்கள். வெளிவட்டாரச் செல்வாக்கு உயரும்.கடகம்
நெருஞ்சி முள்ளைப் போல ஒரு கவலை நெஞ்சில் உறுத்தும். மனைவி மக்களின் ஆதரவால் மன நிம்மதி பெறுவீர்கள். தேவைக்காக அதிக விலை கொடுத்து பொருட்கள் வாங்குவீர்கள். வேலை செய்யும் இடத்தில் கடுமையான உழைப்பால் நல்ல பெயர் எடுப்பீர்கள். பணிச்சுமை காரணமாக அரசு ஊழியர்கள் மனச்சோர்வு அடைவீர்கள். வாக்குவாதங்களில் ஈடுபடாதீர்கள்.

சிம்மம்
முயற்சி செய்யாமலேயே முன்னேற்றப் பாதைகளின் கதவுகளை திறப்பீர்கள். விவசாயிகள் விளைச்சல் அதிகமாகி மகிழ்ச்சி அடைவீர்கள். மேலதிகாரிகளின் அன்பை எண்ணி ஆச்சரியப்படுவீர்கள். தந்தையாரின் பல் வலிக்கு மருத்துவம் பார்ப்பீர்கள். சிக்கலில் இருந்த வழக்குகளுக்கு சுலபமாகத் தீர்வு காண்பீர்கள். புதிய வாகனம் வாங்குவீர்கள்.கன்னி
ஆடை ஆபரணங்கள் வாங்கி மனைவி மக்களை அசத்துவீர்கள். புதிய பொருட்களால் வீட்டை அலங்கரிப்பீர்கள். கேட்ட இடத்தில் தட்டாமல் பணம் பெறுவீர்கள். விருந்து நிகழ்ச்சிகளால் வீட்டை கலகலப்பாக்குவீர்கள். கணவனின் மனம் கோணாமல் மனைவியும் மனைவியின் மனம் சுருங்காமல் கணவனும் கவனமாக நடந்துகொள்வீர்கள்.

துலாம்
செல்லும் இடமெல்லாம் சிறப்புப் பெறுவீர்கள். அனைவரும் உங்கள் வார்த்தைக்குக் கட்டுப்படுவார்கள். நண்பரின் குடும்பப் பிரச்சனையைத் தீர்த்து வைப்பீர்கள். அரசாங்க வேலைகளில் அனுகூலம் அடைவீர்கள். வேலைக்காகக் காத்திருப்பவர்களின் கனவு நனவாகும். புதிய வீடு கட்ட அடித்தளம் அமைப்பீர்கள். சிறு,குறு வியாபாரிகள் வளர்ச்சி காண்பீர்கள்.

விருச்சிகம்
வளர்பிறை சந்திரனால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் காண்பீர்கள். கடின உழைப்புக்குப் பிறகு வெற்றி பெறுவீர்கள். பணியிடத்தில் தேவையில்லாத டென்ஷன் அடைவீர்கள். மருத்துவத்திற்கு அதிகம் செலவு செய்வீர்கள். தொழில் துறைகளில் மந்தமான நிலையை காண்பீர்கள். உருக்கமாக பேசி உறவினர்களை ஒன்று சேர்ப்பீர்கள்.தனுசு
மேலதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாகாதீர்கள். கொடுத்த வாக்கைக் காப்பாற்ற தவறாதீர்கள். பயணங்களின்போது எச்சரிக்கையாக இருங்கள். சிறு விபத்துக்களைச் சந்திப்பீர்கள். நண்பர்களின் ஆதரவை உரிய நேரத்தில் பெறுவீர்கள். உறவினர்களும் உங்களுக்கு உதவும் எண்ணத்தில் இருப்பார்கள். கடமைக்காக வேலை செய்யாதீர்கள்.

மகரம்
நீண்டகாலத் திட்டத்தை நிறைவேற்ற அடி போடுவீர்கள். குடும்பத்தில் மங்கள நிகழ்ச்சிக்கான பேச்சுவார்த்தை நடத்துவீர்கள். கோயில் தரிசனங்களுக்காக குடும்பத்துடன் செல்வீர்கள். தொழிலை முன்னேற்ற பாதையில் கொண்டு போவீர்கள். அலங்காரப் பொருட்கள் விற்பனையால் வியாபாரிகள் புது உற்சாகம் அடைவீர்கள்.

கும்பம்
கண்ணை மூடிக்கொண்டு காரியம் செய்தாலும் விண்ணைத் தொடும் வெற்றி பெறுவீர்கள். கையில் காசு பணம் தாராளமாகப் புழங்கும். சாதுரியமான செயலால் தொழிலில் சாதகமான பலனை அடைவீர்கள். வேலைத் திறமையால் ஊழியர்கள் மரியாதையை உயர்த்தி கொள்வீர்கள். மறைமுக எதிரிகளின் முயற்சியை முறியடித்து சாதனை படைப்பீர்கள்.

மீனம்
எதிலும் மிகுந்த எச்சரிக்கையாக செயல்பட்டால் பண இழப்பை சந்திக்க மாட்டீர்கள். கெட்டபெயர் வாங்காமல் கெட்டிக்காரத்தனமாகச் நடந்து கொள்ளுங்கள். வேலை காரணமாக அலைபவர்கள் வேளை வேளைக்கு சாப்பிட தவறாதீர்கள். இல்லையென்றால் வயிற்றுக் கோளாறுகள் ஏற்பட்டு மருத்துவமனைக்கு செல்வீர்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *