தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் வடமராட்சி கிழக்கு செயற்பாட்டாளர் அருள்மதி கைது???

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் வடமராட்சி கிழக்கு செயற்பாட்டாளர் அருள்மதி கைது செய்யப்பட்டுள்ளார் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது.

ஜுன் இரண்டாம் திகதி மருதங்ககேணி விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற பொதுமக்கள் சந்திப்பு தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்ததாக அருள்மதியின் கணவர் தெரிவித்துள்ளார். மருதங்கேணி பொலீசாரினால்‌ அருள்மதி கைது செய்யப்பட்டுள்ளார்..தையிட்டியில் கட்டப்பட்ட சட்டவிரோத விகாரைக்கு எதிரான ஜனநாயக போராட்டத்தில் கலந்து கொண்டிருந்தததையடுத்து இவருக்கு தொடர்ச்சியான அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டிருந்ததுநேற்று அருள்மதியின் வீட்டிற்கு சென்ற இருவர் தாங்கள் இராணுவ புலனாய்வாளர்கள் என தெரிவித்து அருள்மதி விரைவில் கைது செய்யப்படுவார் என எச்சரித்துவிட்டு சென்றிருந்தனர். எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.