முதலிரவில் குழந்தை பெற்ற மணமகள்; அதிர்ச்சிச் சம்பவம்..!

முதலிரவில் வயிறு வலிப்பதாக கூறி குழந்தை பெற்ற மணமகளால் கணவன் அதிர்ச்சியடைந்துள்ளார்.

தெலுங்கானா, செகந்திராபாத் நகரை சேர்ந்த பெண் ஒருவர், கிரேட்டர் நொய்டாவை சேர்ந்த ஆண் ஒருவரை திருமனம் செய்துள்ளார்.அதன்பின், முதலிரவில் மணமகள் வயிறு வலிப்பதாக கணவரிடம் கூறியுள்ளார். இதனால் உடனடியாக அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதித்ததில் அவர் 7 மாத கர்ப்பமாக இருப்பதாக தெரிய வந்துள்ளது.

தொடர்ந்து மறுநாள் அவருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. அதன்பின் விசாரித்ததில், மணமகளின் வீட்டாருக்கு அவர் கர்ப்பம் இருப்பது ஏற்கனவே தெரிந்துள்ளது. ஆனால் அதனை மறைத்து திருமணம் செய்து வைத்துள்ளனர்.முன்னதாக, வயிறு பெரிதாக இருப்பது குறித்து கேட்டதற்கு மணமகளுக்கு கல் நீக்க அறுவை சிகிச்சை நடந்தது. அதனால், அவரது வயிறு பெரியதாக உள்ளது என தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து பொலிஸில் எதுவும் புகாரளிக்கப்படவில்லை.

மனமகளை அவரது பெற்றோர் வீட்டிற்கு கணவர் அனுப்பி வைத்துள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.