தமிழர்களுக்கு நடந்த இனப்படுகொலைக்கு சர்வதேச விசாரணையை மேற்கொள்ள ஏன் முன் வரவில்லை – சார்ள்ஸ் கேள்வி

ஏப்ரல் குண்டு வெடிப்புத் தொடர்பான செனல் 4 ஆவணப்படம் தொடர்பில் எல்லோரும் அறிந்த விடயத்தை சர்வதேச ஊடகம் உறுதிப்படுத்தியதை வரவேற்கிறோம் என தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார்.யாழ்ப்பாணத்தில் நேற்று (07) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்,

ஏப்ரல் 21 தாக்குதல் விடயத்திற்கு சர்வதேச விசாரணை கோரிக்கையை வரவேற்கிறோம். அதனை தொடர்ந்து சர்வதேச விசாரணையை வலியுறுத்தி ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு கூட்டமைப்பு கடிதம் அனுப்பியதும் வரவேற்கதக்கது.சனல் 4 ஆவணப்படம் தொடர்பில் எல்லோரும் அறிந்த விடயத்தை சர்வதேச ஊடகம் உறுதிப் படுத்தியதை வரவேற்கிறோம். ஏப்ரல் 21 தாக்குதலுக்கு ஒரு சர்வதேச விசாரணையை முன் வைக்கும் போது எங்களுக்கு நடந்த இனப்படுகொலைக்கு ஏன் இன்று வரை ஒரு சர்வதேச விசாரணையை மேற்கொள்ள முன் வரவில்லை என தெரிவித்தார்.