இலங்கையின் நீதித்துறை மரணித்து விட்டது – சிறீதரன் எம்.பி ஆவேசம்

இலங்கையினுடைய நீதித்துறை ஊழல் நிறைந்தாக மாறியுள்ளதாகவும், தமிழர்களுக்கெதிரான தீர்ப்பிற்கு வரப்பிரசாதம் வழங்கப்படுவதாகவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் தெரிவித்தார்.

நேற்றைய தினம்(3) நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,

முல்லைத்தீவு மாவட்டத்தினுடைய நீதிபதி ரி. சரவணராஜா இந்த நாட்டை விட்டு வெளியேறுவதற்கு காரணமாக இருந்த நாடாளுமன்ற உறுப்பினர் உட்பட்ட பேரனிவாதிகளுடைய நடவடிக்கைகளுக்கு இந்த அரசாங்கம் இதுவரை சரியான பாதையை திறந்து விடவில்லை.இலங்கை ஒரு நீதியான துறையாக இல்லை என்பதை தான் இந்தச் சம்பவங்கள் காட்டி நிற்கின்றன எனவும் இலங்கையினுடைய நீதித்துறை மரணித்து விட்டது எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.