தனது 4 மாத குழந்தையை துஷ்பிரயோகப்படுத்திய கொடூர காமுகத் தந்தை கைது..!

4 மாத குழந்தையை துஷ்பிரயோகப்படுத்திய 3 பிள்ளைகளின் தந்தை ஒருவர் மொனராகலை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட குழந்தையின் தாய் முன்வைத்த முறைபாட்டுக்கமைய இந்த கைது இடம்பெற்றுள்ளது.தமது ஏனைய பிள்ளைகளின் பாடசாலை ஒன்று கூடலில் கலந்து கொள்வதாக குழந்தையை சந்தேக நபரிடம் (தந்தை) ஒப்படைத்து விட்டு சென்றதாகவும் திரும்பி வந்த போது குழந்தை துஸ்பிரயோகத்தினால் பாதிக்கப்பட்டிருப்பதை அவதானித்ததாகவும் குழந்தையின் தாயார் பொலிசாரிடம் தெரிவித்துள்ளார்.இந்நிலையில் கைது செய்யபப்ட்டுள்ள சந்தேக நபர் மொனராகலை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தபபடவுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.