இந்தப் பொலிஸ் உத்தியோகத்தரைத் தெரிந்தால் 25 இலட்சம் சன்மானம் – ஸ்ரீலங்கா பொலிஸ் அறிவிப்பு

போதைப்பொருள் கடத்தல்காரர் ‘ஹரக் கட்டா’ என்ற குற்றவாளி குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் இருந்து தப்பிச் செல்ல உதவியதாக சந்தேகிக்கப்படும் காவல்துறை கான்ஸ்டபிள் தொடர்பில் தகவல் வழங்குபவர்களுக்கு பாரிய பணத்தொகை வழங்கப்படுமென சிறிலங்கா காவல்துறை அறிவித்துள்ளது.இதன்படி கடந்த 9 ஆம் திகதி முதல் தலைமறைவாகியுள்ள முனியபாலகே ரவிந்து சந்தீப குணசேகர என்ற சந்தேகநபரான காவல்துறை கான்ஸ்டபிள் தொடர்பான தகவலை அளிப்பவர்களுக்கு 25 இலட்சம் சன்மானம் வழங்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.அவர் தொடர்பான தகவல் தெரிந்தால் , 0718591960 அல்லது 0718596150 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் எனவும் காவல்துறை அறிவித்துள்ளது.