வவுனியாவில் கிராம உத்தியோகத்தரை அச்சுறுத்திய நபர்களுக்கு நேர்ந்த கதி..!

வவுனியா – புளியங்குளம் வடக்கு கிராம உத்தியோகத்தரை அச்சுறுத்தியமை, மற்றும் அவரது கடமைகளுக்கு இடையூறு விளைவித்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் 8 பேர் கைது இன்றைய தினம் (23-10-2023) செய்யப்பட்டுள்ளனர்.

புளியங்குளம் வடக்கு கிராம அலுவலர் பிரிவில் கிராம அலுவலராக கடமையாற்றும் கிராம உத்தியோகத்தருக்கு தொடர்ச்சியாக கடமைக்கு இடையூறு விளைவித்து வந்த நபர்கள் தொடர்பில் புளியங்குளம் பொலிஸ் நிலையத்தில் கிராம உத்தியோகத்தரால் 3 தடவைகள் முறைப்பாடு செய்யப்பட்ட போதும் பொலிஸார் உரிய நடவடிக்கை எடுக்காத நிலையிருந்ததாக கூறப்படுகிறது.இந்த நிலையில் கிராம உத்தியோகத்தரின் பாதுகாப்பு கருதி பொலிஸார் உரிய நடவடிக்கையை விரைவாக வழங்க கோரி அழுத்தம் கொடுக்கும் முகமாக வவுனியா பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட 20 பிரிவுகளில் கடமையாற்றும் கிராம உத்தியோகத்தர்கள் அனைவரும் ஒருநாள் அடையாள சுகவீனம் போராட்டத்தை இன்று முன்னெடுத்திருந்தனர்.இவ்வாறான நிலையிலேயே புளியங்குளம் வடக்கு கிராம உத்தியோகத்தரை அச்சுறுத்தியமை, மற்றும் அவரது கடமைகளுக்கு இடையூறு விளைவித்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் 8 பேர் மதியம் கைது செய்யப்பட்டுள்ளனர்.கைது செய்த 8 பேரும் வவுனியா நீதவான் நீதிமன்றில் ஆஜர் படுத்தப்பட்ட பின்னர் தலா 10 இலட்சம் பெறுமதியான சரீரப்பிணையில் விடுவிக்கப்பட்டனர்.