தனது சகோதரியுடன் தகாத உறவு; பொலிஸ் உத்தியோகத்தரை கத்தியால் குத்திய தேரர் கைது..!

பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் கழுத்தில் கத்தியால் குத்தி காயப்படுத்திய தேரர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் உத்தியோகத்தர் தேரரின் 20 வயதுடைய சகோதரியுடன் தகாத உறவில் ஈடுபட்டிருந்துள்ளார். இந்நிலையில் நேற்று (16) குறித்த பெண்ணை சந்திக்க பொலிஸ் உத்தியோகத்தர் பெண்ணின் வீட்டிற்கு சென்றுள்ளார்.பல்லேகம முதியோர் இல்லத்திற்கு அருகில் தேரர் , பொலிஸ் உத்தியோகத்தருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

இதன் போது தேரர் தனது பையில் மறைத்து வைத்திருந்த கத்தியால் பொலிஸ் உத்தியோகத்தரின் கழுத்தில் குத்தி காயப்படுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.காயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர் தெனியாய வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கராப்பிட்டிய வைத்திய சாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் தெனியாய பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் 37 வயதுடைய திருமணமான பொலிஸ் உத்தியோகத்தர் ஆவார். கைதுசெய்யப்பட்டவர் பல்லேகம பிரதேசத்தில் அமைந்துள்ள விகாரையில் வசிக்கும் தேரர் ஆவார்.மேலும் இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.