பாடசாலைக் கல்வியை டிஜிட்டல் மயமாக்க எதிர்பார்க்கின்றோம் – சுசில் பிரேமஜயந்த

இலங்கையில் பாடசாலைக் கல்வியை டிஜிட்டல் மயமாக்க எதிர்பார்த்துள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

ஆர்.ஐ.டி அலஸின் 10 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு நேற்று (16) இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.



இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“பாடசாலைக் கல்வியை டிஜிட்டல் மயமாக்க எதிர்பார்க்கிறோம், உலகம் தொழில்நுட்பத்துடன் முன்னோக்கிச் செல்லும் போது நமது பிள்ளைகளின் கல்வித் தேவையை தாமதப்படுத்த முடியாது.

கல்வியை டிஜிட்டல் மயமாக்குவதற்கு அவசியமான கல்வி மறுசீரமைப்புக்களை தற்போது நாம் முன்னெடுத்து வருகின்றோம்.



2024ஆம் ஆண்டிற்கான புத்தங்கள் தற்போது அச்சிடப்பட்டுள்ளன. சீருடைகள் அடுத்த மாதம் 31 ஆம் திகதிக்கு முன்னதாக வழங்கப்படும்.

அனைத்து பாடசாலை மாணவர்களுக்கும் மதிய உணவு வழங்கும் வேலைத்திட்டத்தையும் ஆரம்பிக்கவுள்ளோம்.

யுனெஸ்கோவுடன் இணைந்து 8 இலட்சம் பாடசாலை மாணவர்களுக்கு பாதணி கூப்பன்களைப் பகிர்ந்தளிக்கவுள்ளோம்.



அரசாங்கத்தின் நிதியை மாத்திரம் பயன்படுத்தாமல் பிரான்ஸ் நாட்டின் உதவியுடன் பாடசாலை மாணவர்களுக்கு பாதணிகளைப் பெற்றுக் கொடுப்போம்.

யார் கல்வி அமைச்சராக இருந்தாலும் 4 வருடங்களுக்குள் அந்த உதவிகள் நமது நாட்டுக்கு கிடைக்கும்” என தெரிவித்தார்.