வவுனியா மாவட்டத்தில் புலமைப்பரிசில் பரீட்சையில் முதல் இடங்களைப் பெற்று இரு மாணவர்கள் சாதனை..!

வவுனியா மாவட்டத்தில் 2023 ஆம் ஆண்டுக்கான புலமைப் பரீட்சை பெறுபேற்றில் 184 புள்ளிகளைப் பெற்று இரு மாணவர்கள் முதல் நிலை பெற்றுள்ளனர்.அந்தவகையில், வவுனியா தெற்கு வலயத்தின் பிரபல தேசிய பாடசாலையான வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலய மாணவன் நவரட்ணம் சகானன் மற்றும் பின் தங்கிய பாடசாலையான ஆசிகுளம் அ.த.க பாடசாலை மாணவன் ரவீந்திரதாசன் சரோன் ஆகியோர் 184 புள்ளிகளைப் பெற்று முதல் நிலை பெற்று மாவட்டத்திற்கு பெருமை சேர்ந்துள்ளனர்.