திருக்கோவில் பிரதேசத்தில் இளம் கணவனும் மனைவியும் தூக்கிட்டு தற்கொலை..!

திருக்கோவில் பிரதேசத்தில் சிறு வயதில் திருமணம் செய்துகொண்ட கணவனும் மனைவியும் இன்று (21) செவாய்கிழமை அவர்களது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாக திருக்கோவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.திருக்கோவில் 3 பகுதியைச் சேர்ந்த 28 வயதான மனோகரன் தேவதர்சன் மற்றும் மற்றும் 23 வயதுடைய ரவிந்திரகுமார் நிலுயா இருவரும் 3 வருடத்திற்கு முன் திருமணமாகி இரண்டு வயதுடைய பெண் குழந்தை இருப்பதாகவும் பிரதேச மக்கள் தெரிவித்தனர்.இந்நிலையில், குறித்த இருவரின் சடலங்களும் திருக்கோவில் ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், இந்த மரணம் தொடர்பான மேலதிக விசாரணைகளை திருக்கோவில் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.உங்கள் பிரதேசத்து நிகழ்வுகள் மற்றும் செய்திகளை எமது செய்தித் தளத்தில் பகிரத் தயாராக உள்ளோம். செய்திகளை Tamilpori@yahoo.com என்ற ஈமெயிலுக்கு அனுப்பி வையுங்கள்