வரலாற்றின் முதல் தடவையாக இந்த ஆண்டிற்கான வரி வருவாய் 3 டிரில்லியன் ஆக உயர்வு..!

இலங்கை வரலாற்றின் முதல் தடவையாக 2023 ஆம் ஆண்டிற்கான வரி வருவாய் 3 டிரில்லியன் ஆக அதிகரித்துள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை (நவம்பர் 17) நிலவரப்படி அரசாங்கம் 2,394 பில்லியனை ரூபாய் வரி வருவாயை எட்டியுள்ளது என ஜனாதிபதி செயலகத்தின் பொருளாதார அபிவிருத்தி ஸ்திரப்படுத்தல் பிரிவு பணிப்பாளர் டபிள்யூ.எம்.ஜி. குமாரதுங்க தெரிவித்துள்ளார்.



நிதி இராஜாங்க அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட வரவுசெலவுத் திட்டத்திற்குப் பிந்தைய விசேட அமர்வில் உரையாற்றிய குமாரதுங்க மேலும், வருடத்திற்கு இன்னும் 30 வேலை நாட்கள் எஞ்சியுள்ள நிலையில், வரி வருவாய் ரூ. 3,000 பில்லியனை எட்டும் என கூறியுள்ளார். இது இலங்கையின் சாதனையாகும்.

இன்றுவரை அரசாங்கத்திற்கு சிறந்த வருவாயை ஈட்டித் தருவது உள்நாட்டு இறைவரித் திணைக்களம் எனக் கூறிய அவர், இதன் மூலம் 1,415 பில்லியன் ரூபாவை ஈட்டியுள்ளது என குறிப்பிட்டார். இது மொத்த வரி வருவாயில் 84 சதவீதமாகும்.



சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) வழிகாட்டுதல்களின் படி உருவாக்கப்பட்ட புதிய வரிக்கொள்கை மற்றும் முறையான அரசாங்க மேற்பார்வை போன்றவை இந்த இலக்கை அடைவதற்கான முக்கிய பங்காகும் என்று அவர் சுட்டிக் காட்டினார்.

இதேவேளை இன்னும் பலர் வரி கட்டாது வரி எய்ப்புச் செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.



உங்கள் பிரதேசத்து நிகழ்வுகள் மற்றும் செய்திகளை எமது செய்தித் தளத்தில் பகிரத் தயாராக உள்ளோம். செய்திகளை Tamilpori@yahoo.com என்ற ஈமெயிலுக்கு அனுப்பி வையுங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *